காவிரியில் உரிய நீர் கிடைக்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் தான் தீர்வு காணப்பட்டதாக கூறினார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பிரசாரத்தின்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக திமுக உள்ளதாகவும், ஸ்டாலின் பண்பு இல்லாத தலைவர் என்றும் விமர்சித்தார். காவிரி – கோதாவரி திட்டம் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.
முன்னதாக பேசிய முதலமைச்சர், சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
Discussion about this post