பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 4ஆம் தேதி, சூர்யா என்பவர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பின்னால் நடந்து வந்த நபர், சூர்யா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அந்தப் பெண் அலறவே, கோயிலில் இருந்தவர்கள், அவரை பிடித்து தாக்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் காவலரின் மகன் வசந்த் சாய்ராம் என்பது தெரியவந்தது. எனினும், இச்சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

YouTube video player

Exit mobile version