இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை மோசமாக நடத்தும் திமுக..!

பெண்கள் நம் கண்கள்.. பெண்களின் உரிமைக்களை உறுதி செய்ய நாங்கள் உரிமைத்தொகை தருகிறோம்… பெண்களின் படிப்பையும், பாதுகாப்பையும் இந்த திமுக உறுதி செய்யும் என்று மேடையில் முழங்கிக்கொண்டிருக்கும்போதே, கீழே நின்றுகொண்டிருக்கும் உடன்பிறப்பு, தன் அருகில் இருக்கும் பெண் காவலரையே தகாத இடத்தில் கிள்ளி வைப்பார்கள்.

பெண்ணுரிமை பேசும் விழாவில், ஒரு மேயர் என்றும் பாராமல், இங்க நில்லும்மா … அங்க நில்லும்மா என்று இழுத்து தள்ளிவிடுவார்கள்…. காரில் தொங்க விடுவார்கள்… இதுவல்லவோ பெண்களுக்கு இந்த விடியா அரசு கொடுக்கும் மரியாதை?

அட, இதைவிட லைட்டே என்னவென்றால், மணிப்பூர் நிகழ்வை எதிர்த்து போராடினால், அந்த போராட்டக்களத்திலேயே தென்காசி மாவட்ட சேர்மன் தமிழ்ச்செல்வியிடம் தகாத வார்த்தைகளை பேசி, தவறாக நடந்தார் திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன். மணிப்பூருக்காக போராடுவது இருக்கட்டும். மொதல்ல, நம்ம கட்சிக்குள்ள இருக்கற பெண்களுக்கு பாதுகாப்பை கொடுங்க என்று அந்த இடத்திலேயே வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார் அந்த பெண்மணி… சமீபத்தில் சென்னை ராமாபுரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் கைதானார்.

திமுக பெண்களை எப்படி நடத்தும் என்பதற்கு வெறும் சாம்பிள்தான் இவையெல்லாம்… ஏற்கனவே, 1989ல் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவிக்கு நடந்த கொடுமைகள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றி கருணாநிதி உதிர்த்த வார்த்தை முத்துக்கள் என்று திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினால் தான் தெரியும் அக்கட்சியின் லட்சணம்…

ஆனால், இதற்கெல்லாம் எந்த ரியாக்ஷனும் தராத திமுக, இப்போது, மணிப்பூரில் பெண்கள் மீது வன்முறை நடப்பதற்கு குய்யோ முறையோ என்று கத்திக்கதறுகிறது… இன்னும் ஒருபடி மேலே போய், மஹாபாரதத்தையெல்லாம் இழுத்து, திரெளாபதியை எல்லாம் சாட்சிக்கு இழுக்கிறார் திமுக எம்பியும், ஸ்டாலினின் ஆசைத் தங்கையுமான கனிமொழி எம்பி.. மேடம், நீங்க கலந்துக்கிட்ட கூட்டத்துல பெண் காவலருக்கு நடந்த கொடுமைய கேக்கல, ஆனா, மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக இப்படி குரல் கொடுக்கறீங்களே சூப்பர் மேடம். என்று கலாய்க்குறார்கள் சமூகவலைதள வாசிகள்..

காவிரி, என்எல்சி உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் பல இருக்க, அவற்றையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் மணிப்பூர் பெண்களுக்காக திமுக எம்பிக்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? புரட்சித்தலைவி அம்மா, இந்திரா காந்தி உள்ளிட்டோரை அவதூறு செய்துவிட்டு, இன்று பெண்களின் பாதுகாவலர் தாங்கள் தான் என்று திமுக நாடகம் போடுவது ஏன்? தங்கள் சொந்த கட்சியில் உள்ள மகளிர் பிரச்சனைகளை முதலில் தீர்க்க வக்கில்லாத திமுக நாடாளுமன்றத்தில் வடிக்கும் நீலிக்கண்ணீர் நடிப்பின் உச்சம்.

Exit mobile version