விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள புதிய கான்கீரிட் பாலம் பணிகளை விரைவுபடுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். திருபுவனத்தையும் திருவிசைநல்லூரையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் மரத்திலான நடை பாலம் கடப்பட்டது. இந்நிலையில், சேதமடைந்த மரப்பாலத்தில் சென்ற நடராஜன் என்பவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். மரப்பாலம் இல்லாததால், 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version