அதிமுக அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கிறது !

திமுக மக்களை பிரித்து வைத்துள்ளதாகவும், அதிமுக மக்களை ஒரு போதும் பிரித்து பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மரப்பாலம் 39வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சாதனை படைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version