பட்டாசப் போட்டு! பட்டாளம் கூட்டு! அதிரப் போகுது மதுரை! ஆகஸ்ட் 20-ல் அதிமுக எழுச்சி மாநாடு!

பெண் தானே எதுவும் செய்துவிடலாம், கட்சியை உடைத்துவிடலாம், அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள் அன்றைய திமுக கும்பல். காட்சி மாறியது, ஆட்சி மாறியது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரியணை ஏறியது. ஆம் ரத்தத்தின் ரத்தங்களே! மார்ச் 24, 1989 ஆம் ஆண்டிலே, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் திமுக குண்டர்களால் மானபங்கம் செய்யப்பட்டார். அது தமிழக அரசியலில் இருள் சூழ்ந்த நாள். எந்த இடத்தில் தன்னை அவமானப்படுத்தினார்களோ, அந்த இடத்திற்கு முதலமைச்சரானப் பிறகுதான் வருவேன் என்று சூளூரைத்தார் மக்கள் தலைவி. திமுகவினர் விடும் “தொட்டுப்பார் சீண்டிப்பார்” போலான வெற்றுச் சூளூரை அல்ல! இது புரட்சித் தலைவியின் வெற்றிச் சூளூரை. 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அவர்கள் மாபெரும் வெற்றிப் பெற்று, தான் சொன்னதை செய்தும் காட்டினார். இந்த வெற்றி திமுக எனும் தீய சக்திக்கு விழுந்த சம்மட்டி அடி. முன்பு புரட்சித் தலைவி விழுந்தார் தனியாக, பின் எழுந்தார் தமிழகமாக!

புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட மாபெரும் இயக்கமான அதிமுகவினை எழுச்சிமிகு பாதையில் கொண்டு சென்ற நெஞ்சுரம் மிக்க தலைவியாக இத்தமிழ் நிலத்தில் வலம் வந்தார் புரட்சித் தலைவி ஜெயலலிதா. அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம், இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வலம் பெற செயல்படும், எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிடர் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சட்டமன்றத்தில் கர்ஜித்தார்.

அவரது மறைவுக்குப் பின், தாயை இழந்த தனையனாக கழகத்தினர் மனமுடைந்து மீளாத் துயரில் ஆழ்ந்து போயிருந்தனர். தாயின் பெருமையையும், புகழையும் பறைசாற்ற தொண்டர்கள் படைசூழ வீறு கொண்டு மக்கள் நலன் காக்க, தாய்க்குத் தலைமகனாய் தோன்றினார் நமது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். எளியோருக்கு எளியவராய், விவசாயிகளின் தோழராய், எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாய் திகழ்ந்து கட்சியை நேர்வழியான ஓர்வழியில் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் பேராதரவோடு வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அடிபொடிகளை அகற்றி, மக்கள் நலமே நாட்டிற்கு பலம் என்பதை நிரூபித்து இந்த விடியா கும்பலை வீட்டிற்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது. அதற்கு அச்சாணியாக, கழகத்தின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு அமையப் போகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிமுக மதுரை மாநாடு நடக்கப் போகிறது என்று அறிந்தவுடன் திமுக உடன் பிறப்புகள் சலம்புவதற்கு பதிலாக புலம்புவதிலேயே கருத்தாக உள்ளனர். இது வெறும் முன்னோட்டம்தான் மக்களே! இன்னும் பார்க்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கிறது! பட்டாசப் போட்டு பட்டாளம் கூட்டு அதிரப் போகுது மதுரை!

 

 

Exit mobile version