கொண்டு வந்ததெல்லாம் நாங்க! அதுல ஸ்டிக்கர் ஒட்டுறது நீங்க! அதிமுகவின் “அக்‌ஷய பாத்ரா” திட்டத்தை காப்பி அடித்த திமுக!

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட அக் ஷய பாத்ரா திட்டத்தை காலை உணவுத் திட்டம் என்று திமுக ஸ்டிக்கர் ஒட்டி வெற்று விளம்பரம் தேடுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் மதிய உணவு அளிக்கப்பட்டு வரும் நிலையில், தாயுள்ளத்தோடு சிந்தித்த அதிமுக, மாணவர்களுக்கு காலையிலும் உணவு வழங்கும் அக் ஷய பாத்ரா திட்டத்தினை கொண்டு வந்தது.

இதன்படி அக்ஷய பாத்ரா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் உள்ள ஐந்தாயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் கூடத்தின் பூமி பூஜை கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. பசுமை வழிச்சாலையில் நடைபெற்ற பூமி பூஜையில் அப்போதைய முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சில தினங்களில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக கொண்டு வந்த அட்சய பாத்ரா காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உணவிலும் கூட மதச்சாயம் பூச முற்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியது.

எதிர்க்கட்சியாக இருந்த போது எதை எதிர்த்தார்களோ, அதையே தங்களது ஆட்சியில் புதிய திட்டம் போல காலை உணவுத் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு திமுக இன்று மாநிலம் முழுவதும் அதனை விரிவுப்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தால் எதிர்ப்பது, ஆளும் கட்சியானதும் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் அரசாகவே விடியா அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version