பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் ரேவதி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ரேவதிக்கு கழுத்தில் காயம் இருந்ததை கண்ட உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனையின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரேவதியின் உறவினர்களான அக்ரஹாரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேட்டு, உறவினர் மதன்குமார் மற்றும் ரேவதியின் தோழி ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்காமல், விடியா அரசின் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version