தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கல்லை போட்டு கொலை செய்த சைக்கோ நபர்

சேலத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது சைக்கோ நபர் ஒருவர், தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அங்கமுத்து, இரவு பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள ஒரு கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தூங்கி கொண்டிருந்த அங்கமுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதேபோல், சில தினங்களுக்கு முன்பு டயர் விற்பனை நிலையம் முன்பு தூங்கி கொண்டிருந்த வட நாட்டை சேர்ந்த நபர் மீது கல்லை போட்டு மர்ம நபர் ஒருவர் கொலை செய்து, பணத்தை கொள்ளை அடித்து சென்றார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த பகுதியில் இருந்த  சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதிர்ந்து போயினர். அதில், மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கல்லை போட்டு கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து கொலைகளை செய்து வரும் அந்த சைக்கோ இளைஞரின் புகைப்படத்தைக் கொண்டு அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version