விஏஓ கொலைக்கு ஆறுதல் கூற வராதவர், தோனியின் சிக்ஸை பார்க்க மட்டும் விசிட் அடிப்பது ஏனோ?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று கூறும் நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கிரிக்கெட் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சட்டசபையில் கூட இதைப் பற்றி விளையாட்டுப் பிள்ளை என்கிற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூட, என் அப்பா பவுலிங் போட்டு பலரது விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் என்று பேசினார். அவர் வீழ்த்தியது இருக்கட்டும், அவரது செய்கையால் மக்கள் திமுகவை வீழ்த்துவது வெகு தூரத்தில் இல்லை. சீக்கிரமே வீழத்தான் போகிறார்கள் என்று சில வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் விஏஓ ஒருவர் மணல்கொள்ளையைத் தடுத்தார். அதனால் அவரை ராம சுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் வெட்டிக் கொன்றனர். அதுவும் பட்டப்பகலில் விஏஓ அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொன்றனர். இதற்கு காவல்துறையும் உடந்தை. தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறியும் தக்க நடவடிக்கை எடுக்காமல், காவல்துறை கையூட்டு வாங்கிக்கொண்டு கண்டும் காணாதது போல இருந்துவிட்டது. இதனால் ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துபோனதுதான் மிச்சம். சம்பவம் நடந்த அடுத்தநாள் தூத்துக்குடிக்கு புத்தக திருவிழாவிற்கு சென்ற தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறாமல் டிவிட்டரில் வெறும் இரங்கல் செய்தியை தெரிவித்துவிட்டு கடமை முடிந்தது என்று செவ்வனே சென்றுவிட்டார்.

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசோ இறந்த விஏஓ வின் குடும்பத்திற்கு தக்க சன்மானம் கொடுத்ததோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிட்டது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலினோ நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாகத்தான் உள்ளது என்று சொல்லிவிட்டு வாரவாரம் கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் சென்றுவிடுகிறார். மகளுக்காகவும் மருமகனுக்காகவும் டெல்லி வரை செல்கிறார். மக்களுக்காக தூத்தூக்குடி வரை கூட வர மாட்டிக்கிறார். மக்களுக்கான முதல்வராக ஒருவர் இருக்கவேண்டுமே தவிர கேளிக்கைக்கான முதல்வராக ஒருவர் இருக்கக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version