கர்தார்பூர் தற்போது பாகிஸ்தானில் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸின் பொய்யான வாக்குறுதிகளை இனி விவசாயிகள் நம்பமாட்டார்கள் என்றார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என கூறிய காங்கிரஸ் அதனை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, 4 தலைமுறையாக தேசத்தை ஆட்சி செய்த குடும்பம் விவசாயிகளை புரிந்துக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
குருநானக் தேவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்காததால் கர்தார்ப்பூர் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டினார்.