நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

நடிகை குஷ்பு உட்பட்ட 50 காங்கிஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம் பெண் கொல்லப்பட்டதை கண்டித்து, நேற்று பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் காங்ரஸ் கட்சியினர் சத்தியாகிரக அரவழி அமர்வு போரட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உட்பட 50க்கும் மேற்பட்டோர்  அமர்ந்தபடி தங்கள் எதிர்பை வெளிபடுத்தினர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் திரவியம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது ( அனுமதியின்றி ஒன்று கூடியது மற்றும் போராட்டத்திற்கு அனுமதி வாங்காமல் நடத்தியது) இரண்டு பிரிவின் கீழ் செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்

 

Exit mobile version