இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

நாடாளுமன்ற தேர்தல் வரப்போவதையொட்டி, திடீரென்று நாங்களும் இருக்கோம்ல.. எங்களயும் யாராச்சும் கூப்டுங்கப்பா… என்று கூவிக்கொண்டிருக்கிறார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்.. அதற்காகத்தான் கோவையில்,ஸ்டார் ஹோட்டலில் கட்சிக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். வந்தது 500பேரா? 1000 பேரா என்றுகூட தெரியாமல் அருகில் நிற்கும் நிர்வாகியிடம் சாரி சாரி,. ஈவன்ட் ஆர்க்கணைசர்ஸ் இடம் கேட்கிறார் எலைட் அரசியல்வாதி கமல்..

2,3 நாட்களுக்கு முன்னர் மறைந்த கருணாநிதி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவரை ஆஹோ ஓஹோ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியிருந்தார்.. இதே வாய்தான், கடந்த 2021 தேர்தலுக்கு முன்னர் “நான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு உங்களை துன்புறுத்த மாட்டேன்” என்று கருணாநிதியை வசைமாறி பொழிந்தது.. பின்னர் வழக்கம்போல, விளக்கவுரை கொடுத்து எஸ்கேப் ஆனார்.. திமுகவும் இவரை சும்மாவிட வில்லை… “பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும்?” என்று முரசொலியில் தலையங்கம் எழுதி கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டது கமல்ஹாசனை.. இப்படி குடுமிப்பிடி சண்டையிட்டுக்கொண்டவர்கள் மீண்டும் அளவளாவிக்கொள்வதற்கு காரணம் ஒன்று இருக்கிறது…

செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதையும், “நான் கோவையில் போட்டியிடப்போகிறேன்” என்று கமல் பேசியிருப்பதையும், திமுக – கமல் உறவு கொண்டாடுவதையும் புள்ளிவைத்துஇணைத்துப்பார்த்தால் திமுகவின் திட்டம் புரியும்.. ஆம், கோவையில் செந்தில்பாலாஜி செயல்பட முடியாமல்இருப்பதால், கமலை களமிறக்கி ஏதாவது வித்தை காட்டலாம் என்று கணக்குப்போடுகிறது திமுக.. உடனே, கமல் அவ்வளவு பெரிய அரசியல்வாதியா என்று எண்ணிவிடாதீர்கள்… விக்ரம் படத்திற்கு கூடிய கூட்டம் தேர்தலில் நமக்கு கூடாதா? என்று கனவு கண்டுகொண்டிருக்கும் கமலை வைத்து திமுக இயக்கப்போகும் புது படம் தான் இது… இப்போது புரிகிறதா அந்த பூம் பூம் காரர் யார்? பூம் பூம் காரரின் மாடு எது என்று ?

மக்கள் நீதி மய்யம் என்று ஒரு கட்சி, மக்களுக்காக அந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம், அந்தப்போராட்டம், இந்தப்போராட்டம் என்று வீதியில் இறங்கியதாக கேள்விப்பட்டதுண்டா? அட அட்லீஸ்ட், மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டதுண்டா? அதற்கான எந்தவிதமான அறிகுறிகள்கூட இல்லாத ஒரு அமைப்பை மக்கள் எப்படி நம்பப்போகிறார்கள்? சினிமாவில் அவர் உலகநாயகன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதான்.. ஆனால், சினிமா டிக்கெட் வாங்கும் அனைவரும் அவருக்கு ஓட்டுப்போட்டு எம்பி ஆக்கிவிடுவார்கள் என்று எண்ணுவதுதான் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது…

ஏற்கனவே, 2019 நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டுவிட்டு 2 ஆண்டுகள் ரெஸ்ட் எடுத்தார் கமல்…பிறகு 2021ல் உயிர்த்தெழுந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டி,… பின்னர் 2 ஆண்டுகள் ரெஸ்ட் மற்றும் ஷீட்டிங்… தற்போது, மீண்டும் “சப்ஜட்க்கு உயிர் இருக்கு” என்ற அவரின் டயலாக் போலவே, திடீர் திடீர்ன்னு வருதாம்.. போவுதாம்.. போட்டிபோடுதாம்.. தோக்குதாம்… என்று இருக்கிறது மக்கள் நீதிமய்யத்தின் நிலைமை…

ஆக, 2021 தேர்தலுக்குப்பிறகு காணாமல்போன கமல், சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா? கமலை வைத்து விக்ரம் படத்தில் ஹிட் கொடுத்ததைபோல, கோவையில் ஹிட் கொடுக்கலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் திமுகவிற்கு, அட்டு ப்ளாப் கொடுக்கப்போகிறார் அரசியல்வாதி கமல் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகிறது..

–  மனோஜ் குமார் கோபாலன், இணையாசிரியர்

Exit mobile version