உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

உலகின் நீளமான ’அடல்’ சுரங்கப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் கனவுத்திட்டமான இதில், இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கும், லடாக்கின் லே பகுதிக்கும் இடையே சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில், ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்பத்தில் 4.000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,100 மீட்டர் உயரத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version