இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சமாக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டில், தினசரி பாதிப்பு 24 ஆயிரத்து 405 ஆக உள்ளது. கேரளாவில் 18 ஆயிரத்து 853 பேரும், கர்நாடகாவில் 18 ஆயிரத்து 324 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 713 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 643 பேரும், இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 460 பேரும் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 71 பேர் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Exit mobile version