ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

இந்தியாவின் வரைபடத்தை தவறாக சித்தரித்தது தொடர்பாக ட்விட்டர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனித்து இருப்பது போன்ற வரைபடத்தை ட்விட்டர் அதன் தளத்தில் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, டிவிட்டரின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மஹேஷ்வரி மீது ஐபிசி 502(2) மற்றும் 74 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. பஜ்ரங்தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்படி நடப்பது முதன்முறையல்ல என்றபோதிலும், கடந்த மாதங்களில் 3வது முறையாக இந்தியா குறித்த தவறான வரைபடத்தை தனது தளத்தில் டிவிட்டர் நிறுவனம் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டரின் இந்த செயல்பாடுகள் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மேற்கண்ட விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பபடும் என்றும் டிவிட்டர் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.

சர்ச்சையைத்தொடர்ந்து வரைபடத்தை தளத்திலிருந்து நீக்கியது டிவிட்டர் நிறுவனம்

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version