இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் ஒரு கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த மாத இறுதிக்குள் 2 கோடியே ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 960 டோஸ் தடுப்பு மருந்துகள் மாநில அரசுகளுக்கு வழங்க இருப்பதாக கூறினார். திட்டமிட்டு செயல்படுவதில் தான் சிக்கில் இருக்கிறதே தவிர, கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

பெரிய மாநிலங்ளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறையும், சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படுவதாகவும் ராஜேஷ் பூசன் கூறினார். கேரள மாநிலம் 100 சதவீதம் தடுப்பூசியை வீணாக்காத மாநிலம் என்றும் சில மாநிலங்கள் 9 சதவீதம் வரை தடுப்பூசிகளை வீணாக்குகின்றன என்றும் ராஜேஷ் பூசன் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version