இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

60 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டவுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல மத்திய அமைச்சர்கள் அமித் ஷா தொடங்கி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் வேக்சின் போட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முறையான காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கொரோனாவில் இருந்து மீண்டார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 3 மாத காலத்திற்கு தடுப்பூசி போடக் கூடாது என்பதால் அவர் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோக மே மாதம் வரையிலும் அவர் கொரோனாவுக்குப் பிறகான இருமல் பிரச்சினையை சமாளித்துக் கொண்டிருப்பதாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி சொன்னது கவனிக்கத்தக்கது.  

தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டபிறகு, தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.  

இந்நிலையில், வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தொடருக்கு ராகுல் காந்தி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொண்டு வரலாம் என்பதால் அவர் கலந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிரது. இந்த விவகாரத்தில் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவர் முடிவெடுப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

Exit mobile version