`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரை அடையாளம் தெரியாமல் ஆட்சியர் தேடிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் வீடுகளுக்கே நேரடியாக காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் விற்பனையை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக காரில் வந்து இறங்கிய ஆட்சியர், அங்கே இருந்தவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அருகில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பழனியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

ஆனால் ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினரை அடையாளம் தெரியவில்லை. எம்.எல்.ஏ எங்கே? வந்துவிட்டாரா? என ஆட்சியர் கேட்க, அருகில் இருந்தவர்கள் அமைதியானார்கள். அதனையடுத்து பழனி, எம்எல்ஏ தான்தான் என அறிமுகம் செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. எம்எல்ஏவை கூட அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்சியர் அப்டேட்டில் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

Exit mobile version