இன்று கனமழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எவை??-வானிலை ஆய்வு மைய தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூறிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட தகவலை காட்சிப்பதிவு வடிவில் காண விரும்பினால்  கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்..

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version