கலெக்டர் ஆஃபீஸில் இரண்டு கால்களை இழந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

தேனியில் 2 கால்களும் முறிந்த பள்ளிச் சிறுமி நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் புறக்கணித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யனார்-கற்பகவள்ளி தம்பதியினர். இவர்களது மூத்த மகள் ரூபிகா ஆசாரிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, ரூபிகா பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பியபோது தெருவில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த திட்ட மதிப்பீடுக்கான விளம்பர சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் ரூபிகாவின் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் கால்களில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி ரூபிகா மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிதி உதவி செய்து தரக்கோரி மனு அளிக்க வந்தார். ஆனால் ரூபிகா பல மணி நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் அவரை புறக்கணித்தார்.

Exit mobile version