கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வேலாயுத பாளையம் பகுதியில், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், திமுக, வேட்பாளராக அறிவித்திருக்கும் செந்தில் பாலாஜி மக்களுக்கு பல ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியவர் என்று கூறினார்.
மேலும் அதிமுகவின் பல்வேறு நலத்திடங்களை எடுத்துக்கூறி செந்தில் நாதனுக்கு ஆதரவு திரட்டினார். காவிரி- கோதாவரி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார்.
Discussion about this post