மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றும்போது, இந்த தேர்தலுக்கு பின்னர்தான் தனது அரசியல் வாழ்க்கை துவங்கும் என்று ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசினார். மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றியை பெறும் என்றும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பாமக, அதிமுக கூட்டணி என்பது எஃகு கோட்டையை விட வலிமையானது என்று குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் முதல்வர் நாற்காலி கனவில் உள்ளதாகவும் விமர்சித்தார். திமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிந்துவிடும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
Discussion about this post