அரியலூரில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலினை விமர்சித்துவிட்டு திமுகவை விட்டு வெளியே சென்ற வைகோ, தற்போது அவர்களுடைனேயே சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரித்து விருத்தாசலம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், கோதாவரி – காவிரி நிச்சயம் இணைக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது அதிமுக அரசு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், கள்ளக்குறிச்சி- சேலம் எல்லை அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், அதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் அடைவர் என்று கூறினார்.
Discussion about this post