கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரிப்பதற்காக, துணை ஆணையர்கள் தலைமையிலான இரு தனிப்படை போலீஸார் டெல்லி சென்றனர். துவாரகா பகுதியில் இருந்த, சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Discussion about this post