உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 5வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல்-ஹசன் 75 ரன்னில் போல்ட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில் கேட்ச் ஆனார். இறுதியில் வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 330 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 309 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. அதேவேளையில், தனது முதல் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், இன்றைய ஆட்டம் மூலம் தனது ஆட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது.