தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்

ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள் நிறைவடைந்துவிட்டன.

டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடரை இழந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைந்துள்ளார்

Exit mobile version