சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், அமுல்யா என்ற பெண், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமுல்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அமுல்யாவுக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

Exit mobile version