பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது

பாகிஸ்தான் நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் நோக்கில், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல், கடந்த மாதம் 24ம் தேதி ரஜோரி பகுதியில் இருந்தும், 25ம் தேதி தாங்தர் பகுதியில் இருந்தும் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சித்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Exit mobile version