பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: அமுல்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தந்தை கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எனது மகள் மீது நடவடிக்கை எடுக்க அமுல்யாவின் தந்தை வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், அமுல்யா என்ற பெண், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமுல்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அமுல்யாவுக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே, அமுல்யாவின் வீட்டில் மர்ம நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர். பூந்தொட்டிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அமுல்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவரது தந்தை, தமது மகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமுல்யா நக்சல்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்துவிட்டதாக, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா விமர்சித்துள்ளார். அமுல்யாவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version