இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லீவிஸ் விலகல் – பரிதாப நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் விலகி உள்ளார்.

இந்திய மண்ணில் மூன்று வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. முதல் ஆட்டம் வரும் 21-ம் தேதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரரான எவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிசும் தற்போது இல்லாதது அந்த அணிக்கு கவலை அடைய செய்துள்ளது.

Exit mobile version