பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தென்மேற்கு பருவமழை அதிகரித்ததை தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தானது அதிகரித்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இன்று முதல்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, சிவ சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version