இருசக்கர வாகன ஓட்டுநரைக் காவலர்கள் தாக்கும் வைரல் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவரை இரண்டு காவலர்கள் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வீரேந்திர மிஸ்ரா மற்றும் தலைமைக் காவலர் மகேந்திர பிரசாத் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற ரிங்கு பாண்டே என்பவரை அவர்கள் இருவரும் வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி, எட்டி உதைத்ததோடு தரக்குறைவாகப் பேசும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அதில், காவலர்கள் ரிங்குவிடம் இருந்து சாவியைப் பறிக்க முயல்வதும், அதைக் கொடுக்க மறுக்கும் ரிங்கு தன்மேல் தவறு இருந்தால் தன்னைச் சிறையில் அடைக்குமாறு கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் எதிரொலியாகக் காவலர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version