காவல் உதவி ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து!

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். பணி முடித்து இருசக்கர வாகனத்தில், மயிலாப்பூரில் இருந்து கலங்கரை விளக்கம் அருகே, சாலையில் வலதுபுறமாக திரும்ப முயன்றார். அப்பொழுது மயிலாப்பூர் நோக்கி இருசக்கரத்தில் வந்த நபர், எதிர்பாராத விதமாக உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது மோதினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

Exit mobile version