ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தபால் தலையை வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் பாகிஸ்தானுடன் அதன் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பேசப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் காஷ்மீரில் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதே போன்று, கடந்த சில நாட்களுக்கு முன், அரியானா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தானுடன் இனிமேல், பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயமாக மட்டுமே இருக்கும் என்றும் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version