நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
சென்னை கோயம்பேட்டில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பிப்ரவரி 19ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படும் என அறிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்காக, 31 ஆயிரத்து 29 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 121 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தயார்நிலையில் உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,838 பதவியிடங்களுக்கு தேர்தல், 12,838 பதவியிட தேர்தலுக்காக 31,029 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு. சென்னையில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2.79 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது : தேர்தல் ஆணையர்
55,337 கட்டுப்பாடு கருவிகள், 1,06,121 வாக்குபதிவு இயந்திரங்கள் தயார். உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமனம். சென்னை மாநகராட்சிக்கு 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்