மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் ஒரு பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டால், அவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் மரம் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை பள்ளிக்கல்வி துறை செயல்படுத்துகிறது. மேலும், 33 வகையான சிறப்பு செயல்முறைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கும், இந்த மதிப்பெண்களை வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

Exit mobile version