நடப்பாண்டில் 25.87 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: அரசுத் தேர்வுகள் இயக்கம்

நடப்பு கல்வியாண்டில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மாநில பாடத் திட்டத்தின் கீழ், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2-ல் தொடங்கி, ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவர்களும் பொதுத்தேர்வை எழுத உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில், 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version