தேர்வின்போது சுற்றுசுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்

மகாராஷ்டிராவில் பள்ளி தேர்வின்போது, சுற்று சுவரில் ஏறி மாணவர்கள் காப்பியடிக்க, சிலர் துண்டு சீட்டுகளை தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாகவுன் பகுதில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது பள்ளி சுற்று சுவரில் ஏறிய சிலர், மாணவர்களுக்கு துண்டு சீட்டுகள் வழங்கி காப்பியடிக்க உதவி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தங்கள் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version