பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

2019-20-ம் கல்வியாண்டுக்கான பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள ஒவ்வொரு தேர்வுகளும், காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் ஒன்றே கால் மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 400 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 தேர்வர்களும், 6 ஆயிரத்து 356 தனித்தேர்வர்களும் என மொத்தமாக, 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் இந்த பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

இந்த தேர்வுக்காக, இந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 113 தேர்வு மையங்களுடன் சேர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வு மைய வளாகத்துக்குள் தேர்வர்கள் செல்போன் எடுத்துவரக்கூடாது எனவும், அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version