10, 11, 12 ஆம் வகுப்புக்களின் பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களின் பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்துப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, 10, 11 மற்றும் 12 வகுப்புக்களின் பொதுத் தேர்வுகள் இரண்டரை மணி நேரத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பாடத்தின் படி, 10,11 மற்றும் 12ஆம் வகுப்புக்களின் பொதுத்தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version