ஹெச்1பி1 விசா – புதிய விதிமுறைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம்

ஹெச்1பி1 விசா-வின் புதிய விதிமுறைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஹெச்1பி1 விசா-வின் புதிய விதிமுறைகள் குறித்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெயிட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஹெச்1பி1 விசா திட்டத்தின் கீழ் சுமார் 85,000 குடியுரிமைப் பெறாத தொழிலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விசா பெற்று வரும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டுபாடுகள் 60 நாட்களுள் அமலுக்கு வரும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ஐ.டி ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version