`கொரோனாவைக் கண்டு அஞ்சவேண்டாம்’ – டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸூக்கு சிகிச்சைப் பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் வீடு திரும்பினார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திகொண்டு இருக்கும் நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் விட்டுவைக்கவில்லை.மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம், மொத்தம் 7 கோடிக்கும் மேல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரச்சாரத்தில் இருந்த டிரம்புக்கு அக்டோபர் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டிரம்பின் உடல் நிலை மோசமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வர, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவரே தனது உடல்நிலை குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், `நான் நலமாக உள்ளேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். மீண்டும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்’ கூறியிருந்தார். மேலும், `கொரோனாவைக்கண்டு மக்கள் அஞ்சவேண்டாம்’ என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

இந்த நிலையில், டிரம்ப் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் எற்பட்டது எனவும், ஆக்சிஜன் அளவு சீராகவும், மூச்சுத்திணறல் எதுவும் எற்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறினர். கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். வெள்ளை மாளிகையின் மேல்தளத்திற்கு சென்ற டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கும் , அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சல்யூட் செய்தார். கூடிய விரைவில் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை வட்டார் தகவல் தெரிவிக்கின்றன.

Exit mobile version