அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட்!

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் அலி அல்காசிமெர், ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 30 பேர் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக இன்டர்போலின் உதவியை ஈரான் நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version