அதிபர் மீதான குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு!

அமெரிக்க படை வீரர்களை கொன்றதற்காக தலிபான் குழுவுக்கு ரஷ்யா பணம் வழங்கிய விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்களை கொன்றதற்காக தலிபான் குழுவுக்கு ரஷ்யா பணம் வழங்கியதாக நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பரபரப்பு செய்தி வெளியிட்டது. அமெரிக்க உளவுத்துறை மூலம் இது பற்றி அதிபர் டிரம்புக்கு சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்த போதும், ரஷ்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இது பற்றிய உளவுத்துறை தகவல் அதிபர் டிரம்புக்கு தெரிவிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. இந்த சம்பவத்தில் உளவுத்துறையின் பணிகளை பற்றி கருத்து தெரிவிக்க விரும்பாத வெள்ளை மாளிகை, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டி உள்ளது.

Exit mobile version