பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில், பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், 110-விதியின் கீழ், 7 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக, பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை பகுதியில், 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2018 டிசம்பர் மாதம் கட்டுமானப் பணி தொடங்கியது. இந்த பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்தில், பழங்குடியின மக்கள், வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார பராம்பரிய முறைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தற்போது இதற்கான குடில்கள் அமைக்கப்பட்டு, 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version