கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடிவேரி அணையில் குளிக்கும்போது, நீரில் முழ்கி உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில், அணையின் ஆழமான பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் நிரப்பி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையில், தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து குளித்துச் செல்கின்றனர்.
 
கொடிவேரி அணையின் அருவியில் குளிக்கும்போது, சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி இறப்பதை தடுக்கும் வகையில், அருவி பகுதியில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, குழிகள் உள்ள இடங்களில் மீனவர்கள் பரிசல் மூலம் சென்று, மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர்.

Exit mobile version