கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக் கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிவது வழக்கம். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களான கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

Exit mobile version