ரூ. 320 கோடி மதிப்பில் கட்டபட்ட இரண்டடுக்கு மேம்பாலம் நாளை திறப்பு

சேலத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பாலம் பணிகளில், நிறைவுபெற்ற பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. பால கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த புதிய பாலங்கள் நாளை திறந்து வைக்கப்படுகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

Exit mobile version