வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, கோவை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version